×

தொழில்நகரமாக இருக்க வாய்ப்பு கீழடி அருகே மணலூரில் உலைகலன் கண்டுபிடிப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே மணலூரில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. 2 குழிகள் தோண்டப்பட்டு கடந்த 10 நாட்களாக அகழாய்வு பணிகள் நடந்து வந்த நிலையில், நேற்று மணலூரில் உள்ள ஒரு குழியில் உலைகலன் கண்டறியப்பட்டது. இந்த உலை கலன் ஒன்றரை அடி விட்டத்துடன் வட்ட வடிவில் கிடைத்துள்ளது. ஒற்றை செங்கற்களால் கட்டப்பட்ட இந்த உறைகலனானது, உலோகங்களை உருக்கி ஆபரணங்கள் செய்வது உள்ளிட்ட மற்ற பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். உலைகலன் கிடைத்திருப்பது மணலூர் தொழில்நகரமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Ulailayan ,Manalur Manalur ,Discovery , Industrial, kilati, manalur, furnaces
× RELATED வட இந்தியர்களின் வரவை ஆதரிக்கும் படமா: பாஸ்கர் சக்தி பதில்