×

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.:குடிசை பகுதிகளில் வீடு வீடாக சோதனை நடத்த திட்டம்

சென்னை: சென்னையில் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர குடிசை பகுதிகளில் வசிப்பவர்கள் 7 நாட்கள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகளுக்கு தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. ஆகவே சென்னை மாநகராட்சியில் நெரிசலான குடிசை பகுதிகளில் வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அங்கு இருக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ரத்தக்கொதிப்பு, இருதய நோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து 7 நாட்கள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனிமை முடிந்து வீடு திரும்பும் போது அனைவருக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.2500 மதிப்பூதியம் வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.

Tags : Chennai , Intensification ,Coronation ,Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...