×

பூண்டி ஏரிக்கு வந்தது கிருஷ்ணா நீர்

திருவள்ளூர்:  கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.    கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில், வினாடிக்கு 200 கன அடி வீதம் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 1200 கன அடியாக தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த குடிநீர் ராப்பூர், வெங்கடகிரி, காளஹஸ்தி, வரதயபாளையம், சத்தியவேடு வழியாக, 152 கி.மீட்டர் தூரத்தை கடந்து நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டை வந்தடைந்தது. ஜீரோ பாயின்டிற்கு வினாடிக்கு 120 கன அடி தண்ணீர் வந்தது.

அங்கிருந்து கிருஷ்ணா நீர் ஊர்ந்து வந்து 25 கி.மீட்டர் தூரமுள்ள பூண்டி ஏரியை நேற்று காலை 10.45 மணிக்கு வினாடிக்கு 60 கன அடி வீதம் வந்தடைந்தது.  இன்றைய நிலவரப்படி பூண்டி ஏரியின் முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், 413 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 35 அடியில், 22 அடி தண்ணீர் உள்ளது.Tags : Bundi Lake ,Krishna , Poondi Lake, Krishna Water, Kandalengar Dam
× RELATED சென்னை குடிநீருக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நிறுத்தம்