×

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவிற்கு தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி: இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக் குறைவால்  காலமான செய்தி அறிந்து  வேதனை அடைந்தேன். இவர் இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் மட்டுமின்றி, இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். ஆறுமுகன் தொண்டமான் மறைவு இலங்கை மக்களுக்கும், அந்நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினருக்கும், இலங்கை மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.  பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன்,அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Chief Minister ,Arumugan Thondaman Arumugan Thondaman ,party ,leaders ,death ,Sri Lankan ,Political Party Leaders , Sri Lankan Minister Arumugan Thondaman, the late Prime Minister, political party leaders, condolences
× RELATED வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு