குடோனில் திடீர் தீ விபத்து

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த அகரம் மேல், பகுதியில் நடராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய பொருட்களை தரம் பிரித்து ஏற்றுமதி செய்யும் குடோன் உள்ளது. ஊரடங்கு காரணமாக குடோன் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மதியம் இந்தக் குடோனில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் கிடங்கில் ஏராளமான அட்டை, பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததால் உடனடியாக தீயை அணைக்க முடியாமல் திணறினர். தீயும் கொழுந்து விட்டு எரிந்தது.

இதையடுத்து, விருகம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மேலும் 3 தீயணைப்பு வாகனங்களில் வரவழைக்கப்பட்டது.  நீண்டநேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. அருகிலிருந்த குடியிருப்புகளும் சற்று சேதமடைந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. குடோன் மூடப்படிருந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Related Stories:

>