×

சில்லி பாயின்ட்...

* ஸ்டேடியங்களை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தாலும், மீண்டும் பயிற்சியை தொடங்குவது குறித்து வீரர், வீராங்கனைகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று துப்பாக்கிசுடுதல் வீரர் சஞ்சீவ் ராஜ்புத் கூறியுள்ளார்.
* இன்று நான் விளையாடுவதாக இருந்தால் கோஹ்லியை எனது பந்துவீச்சில் ஹூக் ஷாட் ஆடவும், கட் செய்யவும் தூண்டில் போட்டு விக்கெட் வீழ்த்த முயற்சிப்பேன். நாங்கள் இருவருமே பரந்த இதயம் கொண்ட பஞ்சாபிகள். களத்திலே எதிரிகளாகவும், வெளியே நல்ல நண்பர்களாகவும் இருப்போம்’ என்று பாகிஸ்தான் அணி முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
* நான் பார்த்ததிலே மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். முழுமையான கிரிக்கெட் வீரர் என்றால் ஜாக் காலிஸ் பெயரை சொல்லுவேன்’ என்று ஆஸி. அணி முன்னாள் வேகம் பிரெட் லீ கூறியுள்ளார்.
* பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ஹைதி நாட்டு கால்பந்து சங்கத் தலைவர் ஜீன் பார்ட் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிபா அறிவித்துள்ளது. இந்த இடைக்காலத் தடை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் பிபா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடங்கி இருந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி வீரர்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்கி உள்ளனர்.
* இஷாந்த், ஷமி, பூம்ரா, உமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய வேகப் பந்துவீச்சுக் கூட்டணி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு முழுவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் என்று இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
*  பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடும் போர்ன்மவுத் கிளப் அணி கோல் கீப்பர் ஆரோன் ராம்ஸ்டேலுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
* இன்னும் முழுவீச்சில் பந்துவீசத் தயாராகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரித்து வருகிறேன். மொத்தத்தில், மீண்டும் பயிற்சியை தொடங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

Tags : Shoaib Akhtar ,Pakistan , Pakistan team, former fast bowler, Shoaib Akhtar
× RELATED சில்லி பாயின்ட்...