×

தமிழ்நாடு சட்ட கமிஷன் தலைவர் நீதிபதி சி.நாகப்பன் முதல்வரை இன்று சந்திக்கிறார்

சென்னை: தமிழ்நாடு சட்ட கமிஷன் தலைவர் நீதிபதி சி.நாகப்பன் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறார். சட்ட கமிஷன் தலைவரான உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சி.நாகப்பன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று தலைமை செயலகத்தில் சந்திக்கவுள்ளார்.  அப்போது 43வது சட்ட கமிஷன் அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்யவுள்ளார். அதன்பிறகு சுகாதார துறை நிபுணர்கள், கல்வி துறை நிபுணர்களிடம் ஆலோசனை செய்யவுள்ளார். இந்த சந்திப்பின்போது சுகாதார துறை உயர் அதிகாரிகள், கல்வி துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் சட்ட கமிஷன் தலைவர் முதல்வரை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



Tags : C. Nagappan ,Tamil Nadu ,Chief Minister ,Law Commission , Tamil Nadu Law Commission Chairman, Justice C. Nagappan
× RELATED பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.410.73...