×

செல்போனுக்கு தடை அகிலேஷ் கேள்வி

லக்னோ: சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் மோசமான நிலையை மறைப்பதற்காகதான் மருத்துவமனைகளில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மருத்துவ கல்வி இயக்குனர் ஜெனரல் கேகே குப்தா, கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருக்கும் மருத்துவ பல்கலைக் கழகங்கள், மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சம்பந்தப்பட்ட வார்டுகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கொரோனா சிகிச்சை பிரிவுகளில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அப்போது தான் மருத்துவமனைகளின் மோசமான நிலை குறித்த தகவல்கள் பொதுமக்களை சென்றடைவது தடுக்கப்படும். செல்போன்களுக்கு சானிடைசர் பயன்படுத்த வேண்டும். மாறாக செல்போன்களுக்கு தடை விதிக்கக் கூடாது. கொரோனா நோயாளிகள் தனது குடும்பத்துடன் பேசுவதற்கு ஏதுவாக வார்டுக்கு 2 செல்போன்களாவது வழங்கப்பட வேண்டும்,’ என பதிவிட்டுள்ளார்.

Tags : Akhilesh , Koro, Akhilesh Yadav
× RELATED அகிலேஷ் வேட்பு மனு தாக்கல்