×

இந்தியாவில் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக இருந்த சிக்கிமில் முதல் கொரோனா பாதிப்பு உறுதியானது

கேங்டாக்: இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று, கடந்த 4 மாத காலமாக கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்த சிக்கிமில் முதல் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 3,867 பேர் உயிரிழந்த நிலையில், 54,441 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 47,190 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 1,577 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 13,404 பேர்   குணமடைந்துள்ளனர்.  இருப்பினும், கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவுடன் தனது வடப்பகுதி எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள சிக்கிம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. இந்த நிலையில்,  டெல்லியில் இருந்து திரும்பிய 25 வயதுடைய தெற்கு சிக்கிமை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனை அம்மாநில சுகாதாரத்துறை செயலர் பூட்டியா உறுதிபடுத்தியுள்ளார். மேலும், தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

Tags : corona outbreak ,India ,Sikkim ,state , Corona, Sikkim
× RELATED கொரோனா பரவல் முடிவுக்கு வரும் முன்னரே...