×

மனநல பாதிப்புக்கு கவுன்சிலிங் அளிக்கும் நாய்க்கு டாக்டர் பட்டம்: அமெரிக்க பல்கலைக்கழகம் அசத்தல்

நியூயார்க்: அமெரிக்காவில் மனநலம் பாதிப்புக்கு கவுன்சிலிங் அளிக்கும் நாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி, அந்நாட்டின் விர்ஜினியா பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலையில் 8 வயது நாய் உள்பட 4 நாய்கள் பணியாற்றி வருகின்றன. லேபரேடார் ரெட்ரீவர் இனத்தைச் சேர்ந்த அந்த 8 வயது நாயின் பெயர் மூர்ஸ் ேடவிஸ். இது இந்த பல்கலைக்கழகத்தின் மனோதத்துவ துறையில் சிகிச்சை விலங்காக பணியாற்றி வருகிறது. சில நாட்களுக்கு முன் இந்த பல்கலைக்கழகம் நடத்திய பட்டமளிப்பு விழாவில் இந்த மூர்ஸ்க்கு (நாய்) கவுரவ டாக்டர் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.  

கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்த நாய் மருத்துவ மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவ கவுன்சில் அளித்து வருகிறது. இந்த சேவையை பாராட்டி தான் அந்த நாய்க்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பொதுவாக கால்நடை மருத்துவம் என்பது சவாலான பணி. அந்த பணியின் போது ஏற்படும் மன அழுத்தம் காரணமாக கால்நடை மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு இந்த நாய் மருத்துவ கவுன்சில் கொடுத்து அவர்களது உடல் நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவியுள்ளது. இதுவரை இந்த மூர்ஸ் 7500 பேருக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டு விர்ஜினியா கால்நடை மருத்துவ கூட்டமைப்பு வழங்கிய `விலங்குகளின் கதாநாயகன் என்ற விருதையும் மூர்ஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 இதில் கிளைமாக்ஸ் என்னவென்றால் மூர்சுக்கு புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கு என தனியாக சிகிச்சை எடுத்து வந்தாலும் அது பற்றி கவலைப்படாமல் கவுன்சிலிங் அளிக்கும் பணியையும் தொடர்ந்து செய்து வருகிறது. இந்த நாயின் பொழுதுபோக்கு நீச்சல் அடிப்பது.

Tags : Counseling for Mental Impairment: American University Assoc , Mental Health, Counseling, Dog, Doctorate, American University
× RELATED 5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின்...