×

சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி

சினிமாவில் போஸ்ட் புரொடொக்‌ஷன் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு, கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது. இந்த நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளை இன்று முதல் நிபந்தனைகளுடன் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தடை செய்யப்பட்ட மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தக்கூடாது. உள்ளரங்க படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளைத் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையர், மாவட்டங்களில்  ஆட்சியர் அனுமதியை பெற வேண்டும். படப்பிடிப்பில் அதிகபட்சம் 20 பேர் பங்கற்கலாம் ஆகிய நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது.



Tags : Tamil Nadu , Small screen shooting, Government of Tamil Nadu
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...