×

ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே நடத்த வேண்டும்: தலைமை காஜி வேண்டுகோள்

சென்னை: ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே நடத்த வேண்டும் என்று தலைமை காஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ரமலான் பண்டிகை  25ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவுவதை கட்டுபடுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதா, நாம் நமது தொழுகைகளை வீட்டிலேயே செய்து வருகிறோம், இந்நிலையில் ஊரடங்கு நான்காம் கட்டமாக மே 18ம் தேதி முதல் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  எனவே, ரமலான் சிறப்புத் தொழுகையை பள்ளிவாசலிலோ, பொது இடங்களிலோ நடத்துவது சாத்தியமில்லை. எனவே, ரமலான் தொழுகையை அவரவர் வீடுகளிலேயே நடத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Gaji ,Ramzan ,home ,homes , Ramzan Prayer, Chief Gaji
× RELATED தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...