×

ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பால் சுடுகாட்டுக்கு வெளியே சலூன் கடைக்காரர் உடல் தகனம்: அரைகுறை பாகங்களை மீண்டும் தாயே எரித்த காட்சி வைரல்

அரியலூர்: அரியலுார் அருகே ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பால் சுடுகாட்டுக்கு வெளியே சலுான் கடைக்காரர் உடல் தகனம் செய்யப்பட்டன. அரைகுறை பாகங்களை மீண்டும் தாயே எரித்த காட்சி வீடியோ வைராகி வருகிறது. அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த கர்ணன் மகன் கற்பககுமார் (22). தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரத்தில் சலூன் கடை நடத்தி வந்த இவர், கடந்த 6ம் தேதி தனது கடைக்கு பைக்கில் சென்றார். அப்போது கள்ளியூர் என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதி காயமடைந்தார். தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கற்பக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 8ம்தேதி சிகிச்சை பலனின்றி கற்பகுமார் இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு கற்பககுமாரின் உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், 9ம் தேதி உடலை எரிக்க ஊரிலுள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். அப்போது மாலை 4 மணியளவில் தகனமேடையில் எரியூட்டுவதற்காக தயார் நிலையில் இருந்த போது, தகவலறிந்து வந்த அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினர் சுடுகாட்டில் எரியூட்ட கூடாது என்றும், உங்கள் வழக்கப்படி புதைத்து கொள்ளுங்கள் என்றும் கூறி தடுத்துள்ளனர்.

தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் காவல்துறையினர், இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் மாற்று இடத்தில் வைத்து எரித்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு திறந்த வெளியில் கற்பககுமாரின் சடலம் எரியூட்டப்பட்டது. இந்நிலையில் மறுநாள் 10ம்தேதி பால்தெளிப்பதற்காக தீயை அணைக்க வந்தவர்கள் தலையில் ஒரு பகுதி மற்றும் கை எரியாமல் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை கேள்விப்பட்ட கற்பககுமாரின் தாய் அம்சவள்ளி அங்கு வந்தார். பின்னர் அரைகுறையாக கிடந்த பாகங்களை அம்சவள்ளியே எரித்தார். முழுமையாக எரிந்து முடிந்ததும் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : Saloon shopkeeper ,Saloon shopman ,protest , Saloon shopman's,body cremated , heavy-handed protest
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...