×

5 ஆயிரம் பேருக்கு மளிகை பொருட்கள் விஷால் வழங்கினார்

தன் அம்மாவின் பெயரில் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் இதுவரை 5000 பேருக்கு மேல் மளிகைப் பொருட்கள் வழங்கியுள்ளார் நடிகர் விஷால்.
 நடிகர் விஷால், நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு  கொரோனா நிவாரண உதவிகள் வழங்கிவருகிறார். தேவி அறக்கட்டளை மூலம் 5 ஆயிரம் பேருக்கு மளிகை பொருட்களை அவர் வழங்கியுள்ளார விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்களை அவரது ரசிகர்கள் வழங்கி வருகின்றனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள முகாம்களில் இலங்கை தமிழர்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார் விஷால்.

Tags : Vishal , Grocery, Vishal, Corona, Curfew
× RELATED நடிகர் விஷாலின் நிறுவன மேலாளர்...