×

பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு உணவு வழங்கும் ஆட்டோக்காரர்: தினமும் 400 பேருக்கு சப்பாத்தி வழங்குகிறார்

புனே: திருமணத்துக்கு சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஆட்டோக்காரர் ஒருவர் உணவு வழங்கி வருகிறார்.   மகாராஷ்டிரா மாநிலம், புனேயை சேர்ந்தவர் அக்சய் கொத்வாலே (30). வரும் 25ம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் திருமணத்தை தள்ளிவைத்துள்ளார். இந்நிலையில், திருமணத்துக்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை தனது வருங்கால மனைவி ஒப்புதலுடன் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவி வருகிறார் அக்‌ஷய்.

புனேயில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் ஊரடங்கால் வேலையின்றி தவிப்பதுடன். தெருவோர ஏழைகளும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதை கண்டு மனம் வெதும்பினார். இதையடுத்து. தனது நண்பர்கள் உதவியுடன் தினமும் ஏழைகள், கூலித்தொழிலாளிகள், புலம் பெயர்ந்தவர்கள் என 400 பேருக்கு சப்பாத்தி மற்று சப்ஜி வழங்கி வருகிறார்.  இதற்காக சமையலறை ஒன்றை ஏற்படுத்தி நண்பர்கள் உதவியுடன் தயாரித்து சுடசுட உணவு வழங்கி வருகிறார். தனது திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை செலவழிந்து விட்டார். ஆனாலும், நண்பர்கள் உதவியுடன் தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார்.

`கொரோனா தொடர்பாக ஆட்டோவில் ஒலி பெருக்கி வைத்து பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். ஊரடங்கின்போது கர்ப்பிணிகள், முதியோர்கள் மருத்துவமனை செல்ல இலவச சவாரி வழங்குகிறேன். தற்போது காசில்லாத நிலையில் வரும் 31ம் தேதி வரை புலம்பெயர்ந்தவர்களுக்கு புலாவ், சாம்பார் சாதம் வழங்க உள்ளேன்,’’ என்றார அக்‌ஷய்.


Tags : poor ,Autocar , Food for the Poor, Autocar, Corona, Curfew
× RELATED ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்...