×

குப்பையில்லா நகரம்: மைசூருக்கு 5 ஸ்டார்: மத்திய அரசு அறிவிப்பு

மைசூரு:  குப்பைகள் இல்லாத நகரங்களின் பட்டியலில் மைசூருவுக்கு 5 ஸ்டார் அந்தஸ்து கிடைத்துள்ளது.   குப்பைகள்  இல்லாத நகரங்களின்  பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. மத்திய அரசு  நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹரதீப்சிங், குப்பைகள் இல்லாத நகரங்களின் ரேங்க் பட்டியலை அறிவித்தார். அதில், அம்பிகாபூர் (சட்டீஸ்கர்) ராஜ்கோட்  (குஜராத்்), மைசூரு (கர்நாடகா), இந்தூர் (மத்திய பிரதேசம்) மற்றும்  நவிமும்பை (மகாராஷ்டிரா) நகரங்களை 5 ஸ்டார் நகரங்களாக அறிவித்தார்.  பாரம்பரிய நகரம் என்ற பெருமைக்குரிய அரண்மனை நகரமான மைசூருவுக்கு மேலும் ஒரு  விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே, நாட்டிலேயே  தூய்மையான ரயில் நிலையம் என்று  பெயர் எடுத்துள்ள மைசூரு நகரம், இப்போது குப்பைகள் இல்லாத நகரமாக மேலும் ஒரு  கிரீடத்தை சூட்டி கொண்டுள்ளது.

Tags : Mysore, 5 Star, Central Government
× RELATED ராமர் கோயிலை மூடுவதை தடுக்கவே 400 எம்.பி.க்கள் வேணும்: மோடி பிரசாரம்