×

கால்டாக்சி டிரைவர்கள் சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்

ஆலந்தூர்: ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோ, கால் டாக்சி போன்ற வாகனங்கள் இயக்க அரசு தடை விதித்துள்ளது. கடந்த 50 நாட்களுக்கு மேலாக  வாகனங்களை இயக்காததால் டிரைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வறுமையில் தவித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கால்டாக்சி டிரைவர்கள் நேற்று கிண்டி ஜவகர்லால் சாலையில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளிடமும், நடந்து செல்பவர்களிடமும் பிச்சை எடுத்தபடி, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தகவலறிந்து வந்த கிண்டி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கால்டாக்சி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.


Tags : drivers , Caltaxi drivers, fight, corona, curfew
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...