×

ஜூன் 1 முதல் நாள்தோறும் ஏசி இல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும்; இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு: பியூஷ் கோயல் ட்விட்

டெல்லி: ஜுன் 1-ம் தேதி முதல் ஏசி அல்லாத 200 ரயில்களை இயக்க உள்ளதாக பியூஸ் கோயல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துக்களில் ஒன்றான ரயில் போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்தது. ஊரடங்கால் பல தொழிலார்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். வேலை பார்த்த மாநிலங்களிலேயே, முகாம்களில் தங்கியிருந்தனர். ஆனாலும், தங்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும்படி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். எதிர்க்கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின.

இதையடுத்து, சமூக விலகல் நடைமுறையைப் பின்பற்றி, தொழிலாளர்களை, அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வரும் ஜூன் 1  முதல் இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். வெளிமாநில தொழிலார்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல இந்த 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு இந்த ரயில்கள்  முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என பார்க்கப்படுகின்றது.ஏ.சி இல்லாத இந்த ரயிலுக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் என்றும்,  வழக்கமான கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்றும், இதற்கான அட்டவணை இன்னும் ஒரு சில நாட்களில் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் தொடங்கும் வரையில் தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலே பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Tags : AC , AC, Trains, Internet, Booking, Push Goyal
× RELATED வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை...