×

வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை தவிர கூட்டணி கட்சி தலைவர்களின் தொகுதிகளை புறக்கணித்த மோடி: 3 நாளில் ஒருநாளாவது வரவேண்டும் என பாரிவேந்தர் கோரிக்கை

சென்னை: வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை தவிர மற்ற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்ய மோடி, அமித்ஷா ஆகியோர் மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜ தலைமையில் 3வது அணி அமைக்கப்பட்டுள்ளது. பாஜ மட்டும் 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள பாமக மாம்பழ சின்னத்தில் போட்டியிடுகிறது. ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான்பாண்டியன், தேவநாதன் யாதவ் ஆகியோர் பாஜ சின்னத்தில் போட்டியிடுகின்றனர். டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்துக்கு மோடி 8 முறை வந்து பிரசாரம் செய்துள்ளார். அமித்ஷா, நட்டா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமனும் பிரசாரம் செய்துள்ளனர். வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏ.சி.சண்முகம், தர்மபுரி வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து மோடி பிரசாரம் செய்தார். ஆனால் பாரிவேந்தர், தேவநாதன் யாதவ், டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்ய வரும்படி பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களை அழைத்தனர். அவர்கள் வரவில்ைல. ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ் ஆகியோருக்கு பிரசாரம் செய்ய முடிவு செய்திருந்த அமித்ஷா கடைசி நேரத்தில் ரத்து செய்தார்.

கடைசியாக, பிரதமர் மோடி வரும் 15ம் தேதி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதேநேரத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எஞ்சியுள்ள 3 நாளைக்காவது தங்களது தொகுதியில் பிரசாரம் செய்ய தேசிய தலைவர்கள் வரவேண்டும் என கோரினர். அதில் பாரிவேந்தர், என் தொகுதிக்கு எப்படியாவது மோடி அல்லது அமித்ஷா வரவேண்டும் என்று டெல்லி தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம். ஆனால் தமிழகத்துக்கு வரும் திட்டத்தை தேசிய தலைவர்கள் கைவிட்டுள்ளார்களாம். இதனால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை தவிர கூட்டணி கட்சி தலைவர்களின் தொகுதிகளை புறக்கணித்த மோடி: 3 நாளில் ஒருநாளாவது வரவேண்டும் என பாரிவேந்தர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Modi ,A.C. ,Shanmugam ,Vellore ,Parivendar ,Chennai ,Amit Shah ,BJP ,Tamil Nadu ,AC ,Shanmukha ,
× RELATED வேலூர் கோட்டைக்கு வந்துள்ள முதல்...