×

நகை வாங்க நல்ல நேரம்! : ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 672 ரூபாய் குறைந்து ரூ.35,952க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 672 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில் இன்று சற்று ஆறுதலாக விலை குறைந்துள்ளது.சென்னையில் இன்று (மே 19) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,494 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,578 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 84 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நேற்று 36,624 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 672 ரூபாய் குறைந்து 35,952 ரூபாய்க்கு விற்பனையாகிறது.தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.51.60 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.52.30 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி 51,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Sovereign , Jewelry, Gold, Price, Shaving, Sale
× RELATED எட்டா கனியான ஆபரணத் தங்கத்தின் விலை :...