×

முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் ஊரடங்கில் உருவாகும் குறும்படங்கள்

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 4ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக திரைப்படத் தொழில் முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. திரைநட்சத்திரங்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். இந்த நிலையில் திரைப்பட நட்சத்திரங்கள் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பொதுவான விஷயங்களை கொண்ட குறும்படங்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். அப்படியான ஒரு குறும்படத்தில் ரஜினியே நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கில வீட்டில் தனித்திருப்பது பற்றி ‘பேமிலி’ என்ற பெயரில் ஒரு குறும்படத்தை பிரபல இந்தி இயக்குனர் பிரசூன் பாண்டே இயக்கினார். இதில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ரன்பீர் கபூர், நடிகைகள், பிரியங்கா சோப்ரா, மம்ட்டி, மோகன்லால் புனித் ராஜ்குமார், ஆலியா பட் உட்பட பலர் நடித்திருந்தனர்.

நடிகரும் கவியரசர் கண்ணதாசனின் பேரனுமான ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் ‘லாக்டவுன்’ என்னும் குறும்படம் வெளியானது. இதில் ஆண்ட்ரியா நடித்திருந்தார்.  ஊரடங்கு காலத்தில் ஒரு பெண்ணின் மனநிலையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. நடிகர் சாந்தனு “கொஞ்சம் கொரோனா நிறைய காதல்”  என்ற குறும்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அவருடன் அவரது மனைவி கீர்த்தியும் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கில்  கணவன்-மனைவி இடையே நடக்கும் பிரச்சினைதான் படத்தின் கதை கரு. இதேபோல நடிகை ப்ரியா, நடிகர் நாசர் மனைவி கமீலா ஆகியோர் இணைந்து யசோதா என்கிற ஒரு குறும்படத்தை தயாரித்துள்ளனர்.  இயக்குனர் கவுதம் மேனன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். சிம்பு உள்ளிட்ட மேலும் சிலர் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் அமைத்துள்ளார். விரைவில் இது வெளியிடப்படுகிறது. அம்புலி, ஜம்புலிங்கம், ஐரா, என் காதலி சீன் போடுறா, ஆ..., போன்ற படங்களில் நடித்துள்ள கோகுல்நாத் ‘ஸ்ப்ளிட்’ என்ற குறும்படத்தை உருவாக்கி உள்ளார். இதனை அவரே இயக்கி, நடித்துள்ளார். இது கொரோனா காலத்தில் தனி அறையில் சிக்கிக் கொள்ளும் ஒரு இளைஞனின் தவிப்பை சொல்லும் படம்.

இன்னும் பலர் குறும்படங்களை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் அவரவர் வீட்டிலேயே நடக்கிறது. நடிகர்கள் இயக்குனர் சொல்வது போல் நடித்து, அதனை தங்கள் செல்போனில் படம் பிடித்து அனுப்பி வைக்கிறார்கள். அதனை தொகுத்து இயக்குனர்கள் படமாக உருவாக்குகிறார்கள். இந்த முயற்சிகள் கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறது.

Tags : Leading stars, corona, curfew, shorts
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...