×

கொரோனா பரவ யார் காரணம்? : வெளிப்படையான விசாரணை நடத்த WHOவிற்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள்!!!

வாஷிங்டன் : சர்வதேச அரங்கில் சீனாவிற்கு எதிராக அணி திரண்டுள்ள இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள், கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விசாரிக்குமாறு உலக சுகாதார அமைப்பை வலியுறுத்தி உள்ளன. உலக சுகாதார அமைப்பின் 73வது பொது கூட்டம் ஜெனீவாவில் இன்று தொடங்குகிறது. கொரோனா பேரிடர் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வலியுறுத்தி தீர்மானம் முன் வரைவை கொண்டுள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மற்ற உறுப்பு நாடுகளிடமும் ஆதரவை திரட்டி வருகிறது. ஜெனீவா, இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து, பிரேசில்,கனடா உள்ளிட்ட 62 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த தீர்மானம் விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகை நாசம் செய்துள்ள கொரோனா வைரஸ், சீனாவால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை உலக சுகாதார அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. உலக நாடுகள் தங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக சீனாவும் புகார் தெரிவித்துள்ளது. கொரோனா பரவ சீனாவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, இது குறித்து தனியாக விசாரணையை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில் கொரோனா பேரிடர் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தக் கோரி 62 நாடுகள் ஓரணியில் திரண்டு இருப்பது சீனாவுக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது. 


Tags : investigation ,corona spread ,countries ,India ,WHO , Corona, Reason, Transparency, Investigation, WHO, Pressure, India, 62 Countries
× RELATED கர்நாடக பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தீவிரம்!