×

சென்னையில் அத்தியாவசியம், அவசர பணிகளில் ஈடுபட்டுள்ள 50% அரசு ஊழியர்களுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கம் :எந்தெந்த பணிமனைகளில் தெரியுமா ?

சென்னை: சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளில் ஈடுபட்டுள்ள 50 சதவீத அரசு ஊழியர்களுக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்,

தமிழகத்தில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு மற்றும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவின்‌ பேரில்‌, போர்கால அடிப்படையில்‌
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்‌, அத்தியாவசிய மற்றும்‌ அவசரப்‌ பணிகளுக்கு
அரசு போக்குவரத்துக்‌ கழகப்‌ பேருந்துகளை இயக்கிடுமாறும்‌ உத்தரவிட்டுள்ளார்கள்‌.

இந்நிலையில்‌, அத்தியாவசியப்‌ பணிகளான மருத்துவம்‌, பொது சுகாதாரம்‌, குடிநீர்‌, மின்சாரம்‌, பால்‌ மற்றும்‌ தலைமைச்‌ செயலகம்‌, உயர்‌ நீதிமன்றம்‌ உள்ளிட்ட அரசின்‌ முக்கிய துறைகளைச்‌ சார்ந்தவர்கள்‌ பணிக்கு வருகின்ற வகையில்‌, மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகத்தின்‌ சார்பில்‌, 175 பேருந்துகள்‌ கடந்த 25.03.2020 முதல்‌ இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொது ஊரடங்கை மே மாதம்‌ 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதோடு, தலைமைச்‌
செயலகம்‌ மற்றும்‌ அரசின்‌ பல்வேறு துறை அலுவலகங்கள்‌ 50 சதவிகிதப்‌ பணியாளர்களுடன் இயங்கவும்‌ உத்தரவிடப்பட்டுள்ளது‌.அதனடிப்படையில்‌, தலைமைச்‌ செயலகத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 25 பேருந்துகளுடன்‌ கூடுதலாக 25 பேருந்துகள்‌ இன்று முதல்‌ (18.05.2020) இயக்கப்படுவதாக என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

யார் யாருக்காக இந்த பேருந்துகள்:

தலைமைச்‌ செயலக அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌, மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌
மற்றும்‌ தூய்மை பணியாளர்கள்‌ ஆகியோர்‌ தங்களது பணிக்கு வந்துசெல்ல ஏதுவாக இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எந்தெந்த இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன:

சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளான திருவான்மியூர்‌ பேருந்து நிலையம்‌, கொட்டிவாக்கம்‌, ஒக்கியம்‌ தொரப்பாக்கம்‌ தலைமைச்‌ செயலகக்‌ காலனி, பீட்டர்ஸ்‌ காலனி, தாடண்டர்‌ நகர்‌, கிண்டி, கீழ்க்கட்டளை, நங்கநல்லூர்‌, கே.கே.நகர்‌, மறைமலை நகர்‌, கூடுவாஞ்சேரி, தாம்பரம்‌, தாம்பரம்‌ கிழக்கு, மாதம்பாக்கம்‌, பூவிருந்தவல்லி, அய்யப்பந்தாங்கல்‌, வடபழனி, அண்ணா நகர்‌ மேற்கு பணிமனை, ஜெ.ஜெ.நகர்‌ மேற்கு, திருமங்களம்‌ அரசு அலுவலர்‌ குடியிருப்பு, செவ்வாப்பேட்டை, திருநின்றவூர்‌, ஆவடி, பெரியார்‌ நகர்‌, பெரம்பூர்‌ பேருந்து நிலையம்‌, சூரப்பேட்டை, பாடியநல்லூர்‌, மாதவரம்‌ ஆசிஸ்‌ நகர்‌, கவிஞர்‌ கண்ணதாசன்‌ நகர்‌, மீஞ்சூர்‌, மாத்தூர்‌ எம்‌.எம்‌.டி.ஏ., சிங்கப்பெருமாள்கோயில்‌, மணலி, எண்ணூர்‌, நெற்குன்றம்‌, தேனாம்பேட்டை மற்றும்‌ துரைப்பாக்கம்‌ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகப்‌ பேருந்துகள்‌ கட்டண அடிப்படையில்‌ இயக்கப்படுகின்றன.

மேலும், இனி வரும்‌ நாட்களில்‌ கூடுதலாக பேருந்துகள்‌ இயக்கிட ஆவன செய்யுமாறு கோரும்‌ பட்சத்தில்‌ தேவையானப்‌ பேருந்துகள்‌ இயக்கிட தயார்‌ நிலையில்‌ உள்ளது என்றும் மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர்‌ திரு.கோ.கணேசன்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்கள்‌

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Government Employees ,200 Municipal Buses Movement ,Chennai , Chennai, Essential, Emergency, 50%, Government Employees, 200, Municipal Buses, Movement
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்