×

ஜம்முவில் துப்பாக்கிச்சண்டை தீவிரவாதி சுட்டுக்கொலை: ராணுவ வீரர் வீரமரணம்

தோடா:  ஜம்மு காஷ்மீரில் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இதில் ராணுவ வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரின் கண்டானா பகுதியில் போஸ்டா போட்ரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு வீரர்கள் குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு ராஷ்ட்ரிய ரைபிள் படையினர், உள்ளூர் போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் உள்ளிட்டோர் இணைந்து தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் வேட்டை நேற்று காலை வரை நீடித்தது. தீவிரவாதிகள் இடத்தை வீரர்கள் நெருங்கிய நிலையில் காலை 7.30 மணிக்கு தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தீவிரவாதிகள் தாக்கியதில் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : gunman ,soldier ,Army ,Gunmen ,Jammu , Jammu, gunman, terrorist, shooter, soldier
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ