×

ராஜபாளையம் உழவர் சந்தை மூடல் விவசாயிகள் வேதனை

ராஜபாளையம்: ராஜபாளையம் உழவர் சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளை பொருட்களை உழவர் சந்தை மூலம் தாங்களே நேரடியாக விற்பனை செய்வதற்காக கடந்த திமுக ஆட்சியில் ஊரின் மையப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உழவர் சந்தை துவங்கப்பட்டது. தற்போது ஊரடங்கு காரணம் காட்டி அதன் அருகே செயல்பட்டு வந்த காய்கறி சந்தை மார்கெட்டை மூடி பழைய பஸ் நிலையம் தென்காசி சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் திடல் போன்ற பகுதிகளில் காய்கறி விற்பனையை மொத்தமாகவும் சில்லறையாகவும் செய்துவருகின்றனர்.

ஆனால் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் மையம் எங்கேயும் திறக்கப்படாமல் சாலைகளிலும் வீதிகளிலும் விவசாயிகள் தாங்களே நேரடியாக விற்பனை செய்வதற்கு எந்த இடமும் ஒதுக்கப்படாத சூழ்நிலையில் விவசாயிகள் நேரடி விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தங்களுக்கென ஒதுக்கப்பட்ட உழவர் சந்தையை உடனடியாக அரசு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜபாளையம் உழவர்சந்தை பரப்பளவு அதிகமாகவும், வாகனம் நிறுத்துவதற்கு காய்கறி வாங்கி செல்வதற்கும் பரந்த விரிந்த இடத்தில் உள்ளது. எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இருக்கும் உழவர் சந்தையை மூடி வைப்பது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பாதுகாப்பான முறையில் உள்ள உழவர் சந்தையை உடனடியாக திறக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Farmers' Market Close Farmers' Market Close , Farmers', Market ,Close
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...