×

பாதிப்பில் மீண்டும் 3-வது இடத்தில் தமிழகம்: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,000-ஐ தாண்டியது...இதுவரை 2,872 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,000-ஐ தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா  வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 90,927 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4987 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 120 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 2,872 பேர் உயிரிழந்த நிலையில், 34,109  பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1135 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 7088 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் மீண்டும் குஜராத் மாநிலம் 2-வது இடத்திற்கு வந்துள்ளது.  நேற்று 3-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் 10,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 625  பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4308 பேர் குணமடைந்துள்ளனர். இந்த பட்டியலில் தமிழகம் மீண்டும் 3-வது இடத்திற்கு சென்றுள்ளளது.  தமிழகத்தில் 10,585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 74 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 3538 பேர்  குணமடைந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய 11-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 92 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 41 பேர் குணமடைந்தது.
பீகாரில் 1179 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 453 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 191 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 51 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 67 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 56 பேர் குணமடைந்தது.

கோவாவில் 17 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 9333 பேருக்கு பாதிப்பு; 129 பேர் பலி; 3926 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 887 பேருக்கு பாதிப்பு; 13 பேர் பலி; 514 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 167 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 64 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 587 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 495 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 4960 பேருக்கு பாதிப்பு; 126 பேர் பலி; 2839 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 217 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 113 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 43 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 22 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 3 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 11 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 737 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 196 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1946 பேருக்கு பாதிப்பு; 32 பேர் பலி; 1257 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 88 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 51 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 1092 பேருக்கு பாதிப்பு; 36 பேர் பலி; 496 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 1121 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 542 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1509 பேருக்கு பாதிப்பு; 34 பேர் பலி; 971 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 2576 பேருக்கு பாதிப்பு; 232 பேர் பலி; 872 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 4258 பேருக்கு பாதிப்பு; 104 பேர் பலி; 2441 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 2355 பேருக்கு பாதிப்பு; 49 பேர் பலி; 1353 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 4789 பேருக்கு பாதிப்பு; 243 பேர் பலி; 2315 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 78 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Tags : India ,Coronal , Coronation 3: India's Coronal Affect Over 90,000
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!