×

காவலர்களுக்கு 3 லட்சம் மதிப்பு மருத்துவ கிட்: போலீஸ் கமிஷனரிடம் விக்கிரமராஜா வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில்  மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்தார். அப்போது அவர், தனது சங்கத்தின் சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் போலீசாருக்கு ₹3 லட்சம் மதிப்பிலான சானிடைசர், வைட்டமின் மாத்திரைகள், கையுறைகள், முகக்கவசம்  அடங்கிய மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.   பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘காவல் துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரமைப்பு சார்பில் ₹3 லட்சம் மதிப்புள்ள மருத்துவ பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் எங்கள் சங்கம் சார்பில் மருத்துவ பொருட்கள் வழங்கப்படும்’ என்றார்.


Tags : Vikramarajah ,police commissioner , Guards, medical kit worth Rs 3 lakh, police commissioner, wikiramaraja, corona, curfew
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...