×

எவரெஸ்ட் உச்சத்தில் தங்கம் விலை! : சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ரூ.36,368க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம் விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளதால் மக்களிடையே தேவை அதிகரித்துள்ள நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.இன்று (மே 16) சென்னையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,546 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,501 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 36,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 360 ரூபாய் உயர்ந்து 36,368 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50.20 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.49 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி 50,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Everest , Jewelry, Gold, Price, Shaving, Sale
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!