×

50 நாட்களுக்கும் மேலாக வேலையிழப்பு: முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2000 நிதியுதவு...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 51 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 17ம் தேதியோடு  முடிவடைகிறது. இருப்பினும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும். நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில்  இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என்று கடந்த 12-ம் தேதி நாட்டு மக்களுடன் உரையாற்றியபோது பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதற்கிடையே, ஊரடங்கால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 50 நாட்களுக்கும் மேல் சலூன் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில்,  முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பதிவு செய்யாத முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும். பதிவு செய்யாதவர்கள்  நிவாரண தொகை பெற வி.ஏ.ஓ. பேருராட்சி நிர்வாக அலுவலர், மாநகராட்சி மண்டல அலுவலரிடம் மனு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Announcement Palanisamy ,layoffs ,barber workers ,Chief Minister , More than 50 days of unemployment: Rs. Announcement of Chief Minister Palanisamy
× RELATED டிவிட்டர், மெட்டா, அமேசானை தொடர்ந்து கூகுளில் 10,000 பேர் பணிநீக்கம்?