×

டிவிட்டர், மெட்டா, அமேசானை தொடர்ந்து கூகுளில் 10,000 பேர் பணிநீக்கம்?

நியூயார்க்: டிவிட்டர், மெட்டா, அமேசானை தொடர்ந்து, 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான டிவிட்டர், பேஸ்புக்கின் மெட்டா, அமேசான் நிறுவனங்கள் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். இதை கூகுள் நிறுவனமும் பின்பற்ற முடிவு செய்து உள்ளது. அதன்படி, செயல்பாடு திறன் குறைவாக உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியை கூகுள் நிறுவனம் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு தொடக்கத்தில் புதிய செயல்திறன் மேலாண்மை திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம் குறைவான செயல்திறன் உள்ள 10,000 ஊழியர்களை (6% பேர்) கண்டறிந்து அவர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் பணிநீக்க நடவடிக்கையில் களமிறங்கியுள்ளதால், தொழில்நுட்ப பணியில் உள்ளவர்கள் பீதியடைந்துள்ளனர்….

The post டிவிட்டர், மெட்டா, அமேசானை தொடர்ந்து கூகுளில் 10,000 பேர் பணிநீக்கம்? appeared first on Dinakaran.

Tags : Google ,Twitter ,Meta ,Amazon ,New York ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் டிவிட்டர் கணக்கு முடக்கம்