பைலட்டின் திருமண அழைப்பும், ஆபீசரின் நக்கல் வாழ்த்தும் தற்கொலை செஞ்சுக்கிறேன் சார்... நரகத்துக்கு வரவேற்கிறேன் வாப்பா!

விமானப்படையில் கொரோனா கூத்து

பனாஜி: கோவா கடற்படை விமான தளத்தில் பணியாற்றும் ஐஎன்எஸ் ஹன்ஸா போர் கப்பலின் பைலட் நிஷாந்த் சிங். லெப்டினன்ட் கமாண்டரான இவர், மிக் விமானத்தை ஓட்டுபவர். இவர் தனது திருமணத்திற்கு செல்ல அனுமதி கோரி கமாண்டிங் அதிகாரிக்கு வித்தியாசமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த சின்ன கடிதத்தின் மூலம் உங்கள் மீது ெவடிகுண்டை வீசுவதற்காக வருந்துகிறேன். ஆனால், நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன். எனக்கு நானே என் மீது அணுகுண்டை வீசிக் கொள்ளப் போகிறேன். எனக்கு தெரியும், இது யுத்த களத்தில் கண நேரத்தில் நாம் எடுக்கும் அவசர முடிவை போன்றது.

ஆனாலும், என் முடிவை மறுஆய்வு செய்வதற்கு எனக்கு நானே அனுமதிக்கப்படவில்லை.நானும் என் வருங்கால மனைவியும் வாழ்நாளில் எஞ்சிய நாட்களில் இணைந்து வாழவும், ஒருவரை ஒருவர் கொன்று விடாமல் இருக்கவும் உறுதி எடுத்துள்ளோம். இந்த கொரோனா இக்கட்டிலும் இதற்கு எங்கள் பெற்றோர் சம்மதித்துள்ளனர். எனவே, அமைதிக் காலத்தில் எனக்கு நானே என் உயிரை தியாகம் செய்து கொள்ளவும், உங்களைப் போலவும், சக வீரர்களைப் போலவும் திருமணம் என்ற கல்லறையில் கலக்கவும் உங்களிடம் அனுமதி கோருகிறேன்.

இதுபோன்ற ஒரு முயற்சியை இனி ஒருமுறை வானில் பறக்கும் போது கூட செய்ய மாட்டேன் என்றும், இந்த பயிற்சியை எனது ஜூனியர்களுக்கு தர மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன். எனவே, இந்த படுகொலைக்கு சாட்சியாக இருந்து, எனக்கும் என் மனைவிக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.இவ்வாறு கூறியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆபிசர் பின்னர் சுதாரித்துக் கொண்டு, தனது கைப்பட கடிதம் எழுதி திருமணத்திற்கு அனுமதி தந்துள்ளார். அதன் கடைசி வரியாக ‘நரகத்திற்கு வரவேற்கிறேன்’ என வாழ்த்தியுள்ளார். இந்த கடிதங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

Related Stories: