×

கொரோனா சிறப்பு ரயிலில் குளறுபடி; ‘செல்லாத’ டிக்கெட்டில் ரயில் பயணம்: 5 பேருக்கு ரூ32 ஆயிரம் அபராதம்

புதுடெல்லி: கொரோனா சிறப்பு ரயிலில் செல்லுபடியாகாத டிக்கெட்டில் பயணம் மேற்ெகாண்ட 5 பேருக்கு ரூ32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், டெல்லியில் இருந்து 15 ஜோடி சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு கடந்த 11ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுடெல்லி - பெங்களூரு சிறப்பு ஏசி ரயிலில் பயணித்த ஐந்து பயணிகளைக் கொண்ட ஒரு குடும்பம், செல்லாத டிக்கெட்டை பயன்படுத்தி பயணித்ததற்காக ரயில்வே நிர்வாகம் அவர்களுக்கு ரூ.32,000 அபராதம் விதித்தது.

மாநிலங்களுக்கு இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் செல்லாத டிக்கெட்டில் பயணித்த முதல் விதிமீறல் நிகழ்வு இதுதான். சிறப்பு ரயிலில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பிரேம் நரியன், கவுரவ் பால், ஜசாடா, நீரஜ் பால் மற்றும் ஜிதேந்தர் பால் ஆகியோர் புதன்கிழமை இரவு உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி ரயில் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அபராத தொகையை செலுத்தியதும், ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) போலீசார் அவர்களை விடுவித்தனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்லி - ஜான்சி இடையே ஒரு பயணிக்கு ரூ.1,476 ரூபாய் வீதம் ஜிஎஸ்டி வரி உள்பட 5 பேருக்கும் ரூ.15,170.

ஆனால், அவர்கள் ஐந்து பேரும் செல்லுபடியாகாத டிக்கெட்டில் பயணித்தனர். அதனால் அவர்களுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ரயில்வே விதிகளின் கீழ் பயணிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தொகை இல்லாததால், அவர்களின் உறவினர் மூலம் அபராதம் செலுத்திய பிறகு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்’ என்றனர். இதுகுறித்து பயணிகளில் ஒருவரான பிரேம் நரியன் கூறுகையில், ‘எங்கள் டிக்கெட் எவ்வாறு ரத்து செய்யப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பது தெரியவில்லை’ என்றார்.


Tags : Corona Special Train Rail , Corona Special Train, Invalid Ticket, Train Travel
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...