×

மதுரை அருகே கனமழைக்கு 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி நாசம்

பேரையூர்: மதுரை அருகே 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமானதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதனால் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அய்யனார்குளம், கல்கொண்டான்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் 1,500 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

இப்பகுதியில் ஆற்றுப்பாசனம் இல்லாத நிலையில் கிணற்றுப்பாசனம் மூலம் குறைந்த அளவிலுள்ள தண்ணீரில் விளைவித்த நெற்பயிர்கள் அனைத்தும் முற்றிலும் மூழ்கி சேதமடைந்துள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கால் வருமானமே இல்லாத நிலையில், கஷ்டப்பட்டு வளர்த்த நெற்பயிர்களும் மழைக்கு சேதமடைந்து, எங்களை பெரும் துயரத்திற்கு ஆளாகி விட்டதாக விவசாயிகள் கூறினர். தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Madurai ,paddy fields , 1,500 acres,paddy fields, devastated ,heavy rain near Madurai
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை