×

ராணுவத்தில் 3 ஆண்டு பணி அவசரபடக் கூடாது பார்த்து செய்யணும்: நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: குறுகிய கால சேவை திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இளைஞர்களுக்கு 3 ஆண்டு பணி வழங்கும் யோசனை, தேச பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகின் வலுவான ராணுவங்களில் ஒன்றான இந்திய ராணுவத்தில் 13 லட்சம் வீரர்கள் சேவை புரிந்து வருகின்றனர். ராணுவத்தில் பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்ய முடிவு செய்துள்ள மத்திய அரசு, குறுகிய கால சேவை திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு 3 ஆண்டு பணி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த யோசனை தற்போது பரிசீலனையில் உள்ளது. வழக்கமாக, 10 ஆண்டு குறுகிய கால சேவையின் கீழ் இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

ஆனால், 3 ஆண்டு பணி என்பது தேச பாதுகாப்பில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும், இதுபற்றி விரிவாக விவாதித்து முடிவெடுக்க வேண்டுமென நிபுணர்கள், முன்னாள் தளபதிகள் எச்சரித்துள்ளனர். ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராமேஷ்வர் ராய் கூறுகையில், ‘‘இந்தியாவை தவிர உலகில் வேறெந்த நாடும் 7,000 கிமீ நிலப்பரப்புகளை பாதுகாக்கவில்லை. இந்த பரிந்துரை, உள் மற்றும் வெளிமட்ட பாதுகாப்பு பரிமாணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். 3 ஆண்டு சேவைக்காக ஒரு வீரருக்கு 10 மாதங்களுக்கு பயிற்சி தர முடியாது. இந்த யோசனை கற்பனைத்தனமாக இருக்கிறது,’’ என்றார். இதே போல பலரும் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்


Tags : Experts ,military , Army, Indian Army, Corona, Curfew
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின் போது 2...