×

மதுக்கடைகளை திறக்க தடை கோரிய வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல; தள்ளுபடி செய்யுங்க: உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில்மனு தாக்கல்

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மதுபானக் கடைகளை மூடப்பட்டது. இதற்கிடையே, 3-வது முறையாக மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது, சில தளர்வுகளையும் மத்திய அரசு அளித்தது. அதன்படி, சில மாநிலங்கள் அடுத்த நாளே சில கட்டுப்பாட்டுடன் மதுபானக் கடைகளை திறக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதனிடையே, மதுபான விற்பனையின் போது எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என அவசர வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட அதிரடியாக உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு எடுக்க இயலாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பிழையை சரி செய்து மீண்டும் மனுத்தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி மற்றும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இன்று, விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கிர்லோஸ்குமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல.

5,338 டாஸ்மாக் கடைகளில் 850 கடைகளில் தான் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வசதி உள்ளது. செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பண பரிவர்த்தனை பணிகள் முடிக்கப்படும். எனவே, மதுக்கடைகளை மூடக் கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய கோரிக்கை வைத்துள்ளார்.



Tags : Prosecutions ,liquor stores ,TASMAC ,High Court , Prosecutions seeking a ban on liquor stores are not worth investigating; Dismiss: TASMAC response filed in High Court
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்