×

34 வகையான கடைகளை திறந்தும் தவிக்கவிடுறாங்கப்பா...கையில காசு இருந்தா மட்டுமே பொருள் கிரெடிட், டெபிட் கார்டுக்கு கிடையாதாம்

* பொதுமக்களுக்கு வியாபாரிகள் கிடுக்கிப்பிடி
* மணிக்கணக்கில் வரிசையில் நின்றபின் ஏமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 34 வகையான கடைகள் திறக்கலாம் என்று அறிவித்ததை அடுத்து, பொருள் வாங்க கடைகளுக்கு செல்பவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி வருகிறது. கையில பணம் இருந்தால் மட்டுமே பொருள் வழங்கப்படும்... கிரடிட், டெபிட் கார்டு என டிஜிட்டல் பண பரிவரத்தனை எல்லாம் கிடையாது என்று வியாபாரிகள் கிடுக்கிப்பிடி போடுவதால் பொதுமக்கள் பலர் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில், உலகில் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் முறையில்தான் பணப் பரிமாற்றம் நடக்கிறது.

ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு ஊரடங்கில் உள்ள நாளில் பெரும்பாலான வியாபாரிகள் மேற்கண்ட டிஜிட்டல் பரிமாற்றத்தை ஏற்க மறுத்து பணம் இருந்தால் மட்டுமே வியாபாரம் செய்வோம் என்று தெரிவித்துள்ளனர். அதனால் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கி வருகின்றனர். இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொேரானா வைரஸ் பிரச்னையில் நாடு தடுமாறும் நிலையில் பணம் கேட்டு வியாபாரிகள் அடம் பிடிப்பது மக்களை வருத்தம் அடையச் செய்துள்ளது.மால்கள், பெரும் வணிகம் நடத்துவோர் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் செய்தால் அந்த பணத்தை வங்கியில்  இருந்து எடுப்பது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கினர். அதனால் பணம் வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றனர். ஆன்லைன் பணப் பரிமாற்ற செயலிகள் அனைத்தும் தற்போது ஏற்க மறுத்துவருகின்றனர்.

உலக சுகாதார நிறுவனம், இந்திய அரசின் பணப் பரிமாற்ற கழகம் ஆகியவை இந்த சூழ்நிலையில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற நிலையில் வியபாரிகள் பணம் கேட்டு வாங்குவது ஆச்சரியமாக உள்ளது. தற்போது கடையில் ஏதாவது வாங்க விரும்பி கடைக்கு செல்வோர் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டும். அதற்கு பிறகு கடைக்குள் சென்ற பிறகு தான் பணப் பரிமாற்ற அட்டைகள் ஏற்க மறுப்பது தெரியவருகிறது. அதனால் பலர் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு தரப்பில் இருந்து இதுகுறித்து அவசர ஆணை பிறப்பிக்க வேண்டும். பணம் வாங்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.



Tags : stores , 34 types of stores, credit, debit card, corona, curfew
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...