×

கேரளாவில் இன்று முதல் கள்ளுக் கடைகள் திறப்பு: ஒன்லி பார்சல்தான்; சைட்டிஷ் கிடையாது

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு கள்ளுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் கள் விற்பனைக்கு அனுமதி உண்டு. அனைத்து மாவட்டங்களிலும் ஏராளமான கள்ளுக்கடைகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் தென்னங் கள் தான் விற்பனை செய்யப்படுகிறது. ெபரும்பாலான கள்ளு கடைகளில் தோசை, சப்பாத்தி, புரோட்டா, சிக்கன், மீன் உள்ளிட்ட உணவு வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தீவிரம் காரணமாக கேரளாவில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கள்ளுக்கடைகள் மற்றும் மதுக்கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில், தற்போது கள் மற்றும் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என கேரள அரசுக்கு ேகாரிக்கை விடுக்கப்பட்டது. மற்ற அண்டை மாநிலங்கள் மதுக்கடைகளை திறந்த நிலையில்,  ஊரடங்கு முடியும் வரையில் மதுக்கடைகளை திறக்க மாட்டோம் என்று இம்மாநில முதல்வர் பினராய் விஜயன் உறுதியாக அறிவித்தார். ஆனால், மக்களின் கோரிக்கையை ஏற்று வரும் 13ம் தேதி முதல் கள்ளுக்கடைகள் மட்டும் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து, இன்று முதல் கள்ளுக் கடைகள் திறக்கப்பட உள்ளன. கள்ளுக்கடைகள் திறப்பது தொடர்பான அறிவிப்புகளை கேரள கலால் துறை வெளியிட்டுள்ளது.

அதில், கள்ளுக்கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்படும். கடையில் அமர்ந்து குடிக்கக்கூடாது. உணவும் கொடுக்கப்பட மாட்டாது. ஒரே நேரத்தில் 5 பேர் மட்டுமே வரிசையில் நிற்க வேண்டும். ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒன்றரை லிட்டர் கள் மட்டுமே கொடுக்கப்படும். காலை 9 முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கள் விற்பனை அனுமதிக்கப்படும். கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

‘ஊரடங்கை தளர்த்தும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்’
நாடு முழுவதும் ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் கேரள முதல்வர் பினராய் விஜயன் பேசியபோது, ‘ஊரடங்கை தளர்த்தும் உரிமையை அந்தந்த மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வருபவர்களை விமானத்தில் ஏற்றுவதற்கு முன் பரிசோதனை நடத்த வேண்டும். நிபந்தனைகளை தளர்த்தும்போது, மேலும் அதிகளவில் பயணிகள் வருவார்கள் என்பதால் அவர்களை அழைத்து செல்வதில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

சிவப்பு மண்டலம் தவிர பிற பகுதிகளில் நிபந்தனைகளுடன் மெட்ரோ ரயில் இயக்க வேண்டும். தற்போது டெல்லியில் இருந்து மட்டுமே கேரளாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்தும் கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்,’’ என்று கோரினார்.  



Tags : counterfeit shops ,parcels ,Kerala , Kerala, counterfeit shops, parcelton, sitish
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...