×

லோயர்கேம்ப் சோதனைச் சாவடியில் ஆட்கள் பற்றாக்குறை இ.பாஸ் பெற்றவர்கள் பல மணி நேரம் காத்திருப்பு

கூடலூர்: கொரோனா ஊரடங்கால் வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இ.பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம் செல்வதற்கு இ.பாஸ் பெற்றவர்களின் சான்றிதழ்களை தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் சோதனைச்சாவடியில் காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் சரிபார்த்து, பதிவு செய்து அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக சோதனைச்சாவடியில் ஆட்கள் பற்றாக்குறையால், இ.பாஸ் பெற்றுச் செல்பவர்களின் சான்றிதழ் சரிபார்த்து தனித்தனி பதிவேடுகளில் பதிவு செய்ய, அதிக நேரமாவதாகவும், இ.பாஸ் பெற்றவர்கள் பலமணிநேரம் காத்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து சென்னையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கேரளா செல்வதற்காக இ.பாஸ் பெற்று வந்துள்ளேன். சென்னையிலிருந்து இங்கு வரும் வரை 15 இடத்தில் சான்றிதழை சரிபார்த்துள்ளனர். இந்த சோதனைச்சாவடியில் வருவாய்துறை அதிகாரிகள் இல்லை. ஆட்கள் பற்றாக்குறையாலும், அனுபவமில்லாதவர்களை வைத்து லேப்டாப்பில் பதிவுசெய்வதாலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே இ.பாஸ் சரிபார்க்க லோயர்கேம்ப் சோதனைச்சாவடியில் ஆட்களை அதிகரிக்க வேண்டும்’ என்றார்.

Tags : Recipients ,checkpoint ,Lowcamp ,shortest ,Lowcamp Checkpoint , Recipients , shortage , e-passes,e Lowcamp checkpoint,several hours
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...