×

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் இந்திராகாந்தி நகர், விஆர்ஆர் தெருவை சேர்ந்தவர் ஹரீஸ் (20). நேற்று மதியம் வீட்டில் பழுதான ஜங்ஷன் பாக்ஸை சரி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஹரீஸ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.


Tags : Young Victim , Young victim , electrocution
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...