×

பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு குடிபோறேன்..! ‘ராவல் பிண்டி’ எக்ஸ்பிரஸ் பேட்டி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு குடியேற விரும்புகிறேன் என்று, அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் பேட்டி அளித்துள்ளார். ‘ராவல் பிண்டி’ எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘நான் எப்போதாவது கோடீஸ்வரரானால், நான் இந்தியாவின் மும்பையில் குடியேற விரும்புகிறேன். இந்தியாவில் இருந்து சம்பாதிக்கும் பணத்தில் 30 சதவீதத்தை பாகிஸ்தானுக்கு நன்கொடையாக அளிக்கிறேன். 2005ல் காஷ்மீரில் பூகம்பம் ஏற்பட்டபோது ​​பல இந்தியர்களை ஆதரித்தேன்.

பாகிஸ்தானிலும் இந்துக்களுக்கு உதவி செய்து வருகிறேன். கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா இதற்கு மிகப்பெரிய உதாரணம். எல்லா மதங்களையும் பின்பற்றுபவர்களை நேசிக்கிறேன். நான் மிகவும் மென்மையாவன். ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் என் உருவத்தை பார்த்து நான் மிகவும் ஆக்ரோஷமானவன் என்று நினைக்கின்றனர். இந்தி நடிகர் ஷாருக்கானை போல், எனது ரசிகர்களை நேசிக்க கற்றுக்கொண்டேன்’ என்றார். அக்தரின் இந்த பேட்டி பாகிஸ்தானில் புயலை கிளப்பி உள்ளது. ஏற்னவே அக்தரை இந்தியாவின் முகவர் என்று அழைத்து வருகின்றனர்.

மேலும் பாகிஸ்தானில் உள்ள வேறொரு மதத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியாவிற்கு, அக்தர் ஆதரவாக பேசியதால், அந்நாட்டின் ஊடகங்கள் மற்றும் அடிப்படைவாதிகளின் எதிர்ப்புக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Pakistan ,India , Pakistan, India, Rawal Bindi
× RELATED மீன் மார்க்கெட்டில் உள்ளே செல்லவும்,...