×

ஒரு கட்டு ரூ.800க்கு விற்பனை கோரை பயிருக்கு போதிய விலையின்றி விவசாயிகள் வேதனை

கரூர்: ஒரு கட்டு கோரை ரூ.800க்கு மட்டுமே விற்பனையாகிறது. போதிய விலை இல்லாத காரணத்தினால் கோரை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள நெரூர், சோமூர், திருமுக்கூடலூர், என்.புதூர், நன்னியூர் ஆகிய காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் இந்த பகுதி விவசாயிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோரை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.ஆண்டுக்கு இரண்டு முறை கோரை சாகுபடி செய்யப்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம் போன்ற மாவட்ட பகுதிகளுக்கும், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப மொத்த வியாபாரிகள் இந்த பகுதிக்கு வந்து தேவையான கோரைகளை வாங்கிச் செல்கின்றனர். பாய் உட்பட பல்வேறு கைவினைப்பொருட்கள் உற்பத்திக்கு முக்கிய காரணியாக கோரை இருந்து வருகிறது.

விளைவிக்கப்பட்டு அறுவடை செய்யப்படும் கோரைகள், 6 பிடி கொண்டவை ஒரு கட்டாக மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு வரை நியாயமான விலைக்கு விற்பனை செய்யப்பட்ட இந்த கோரைக்கு தற்போது போதிய விலை கிடைக்காமல் விளைவித்த விவசாயிகள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.தற்போதைய நிலையில் ஒரு கட்டு கோரை ரூ.800 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.இதன் காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டு இந்த தொழில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.தேவையும் அதிகமாகி, போக்குவரத்தும் எளிதாகும் பட்சத்தில், கோரை அதிகளவு விற்பனையாகும். எனவே, அந்த தருணத்தை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags : Farmers agonize , inadequate price , quail, Rs.800
× RELATED கார் டயர் வெடித்து விபத்து: எம்எல்ஏ மகள், 3 பேர் காயம்