×

இதுக்காகவே போய் அட்மிட் ஆகலாம் போல இருக்கே.... கமகம மீன் குழம்பு, காரசாரத்துடன் சிக்கன் நெய் மணக்க சாம்பார், குருமாவுடன் ஆப்பம்

* கேரளாவில் பட்டியல் போட்டு நோயாளிகளுக்கு ராஜ விருந்து

திருவனந்தபுரம்: கேரளாவில்தான்  முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அரசு அதிரடி  நடவடிக்கைகளை மேற்கொண்டு வைரஸில் இருந்து மாநில மக்களை காக்க பற்பல  முயற்சிகளை ேமற்ெகாண்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும்  சிகிச்சைகள் எவ்வளவு முக்கியமானதோ, அதுபோல அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு  வகைகளும் இன்றியமையாதவை ஆகின்றன.
உலக அளவில் கொரோனா வைரஸ் அனைத்து  வயதினரையும் பாதித்து வந்தாலும், பெரும்பாலும் முதியவர்களையே உலுக்கி  எடுத்து வருகிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியில்லாதவர்களே இந்த  கொரோனாவால் அதீத விளைவுகளை சந்தித்து உயிரிழக்க நேரிடுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நோயாளிகள் கொரோனா பாதிப்பில்  இருந்து மீண்டு வருவதற்காக, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் வகையில்  அவர்களுக்கு பிரத்யேகமாக உணவுகள் வழங்கப்படுகின்றன.  கேரளாவில்  கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் அரசு  தனிமை முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு தினமும் 3 வேளையும் சத்தான,    கமகம மணத்துடன், சூடாக, சுவைமிகு உணவுகள் வழங்கப்படுகின்றன.  அதன்படி  அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலையில் வடை, சாம்பார்,  சட்னியுடன்  இட்லி, மதியம் அரிசி சாதம், பச்சடி, தீயல், பொரியல்,  மோர்க்குழம்பு,  ஊறுகாய், இரவு பிட்டு, கடலைக்குழம்பு, பழம் என வழங்கப்படுகிறது.

அதுபோல  திங்கட்கிழமைகள்தோறும் காலை  சாம்பார், சட்னியுடன் தோசை, மதியம்  அரிசிசாதம், மெழுக்குபிரட்டி, சட்னி,  அவியல், மீன்குழம்பு,  மரவள்ளிக்கிழங்கு, இரவு சப்பாத்தி, தக்காளி குழம்பு,  பழம் என ஜமாய்த்து  விடுகின்றனர். செவ்வாய்க்கிழமைகளில் காலை இடியாப்பம், காய்கறி  ஸ்டூ, மதியம் சாதம், சாம்பார்,  பொரியல், கிச்சடி, ஊறுகாய், இரவு அப்பம்,  பச்சைப்பட்டாணி குழம்பு, பழம். புதன்கிழமைகள்தோறும் காலை கடலைக்குழம்புடன்  ஆப்பம், மதியம் சிக்கன் குழம்புடன் அரிசிசாதம்,  ஊறுகாய், பொரியல், இரவு  குருமாவுடன் இடியாப்பம், பழம் வழங்கப்படுகிறது. வியாழன்  காலை  பிட்டு, பயறு, அப்பளம், மதியம் சாதத்துடன் அவியல், பொரியல்,  மோர்க்குழம்பு,  ஊறுகாய், இரவு சப்பாத்தி, பருப்பு, அவித்த ஏத்தன் பழம்.

வெள்ளிக்கிழமை சட்னி,  சாம்பாருடன் இட்லி, மதியம் முட்டையுடன் பிரைடு ரைஸ்,  இரவு தோசை, மிளகாய்  சட்னி, பழம் வழங்கப்படுகிறது. சனிக்கிழமைகளில்  இவற்றில் ஏதாவது ஒரு தினத்தில் வழங்கப்படும் உணவுகள் தரப்படுகின்றன. தினமும்  காலை உணவு 7 முதல் 8 வரையும், மதிய உணவு 12.30 1.30  வரையும், இரவு உணவு  6.30 முதல் 7.30 வரையும் வழங்கப்படுகிறது. இதுதவிர காலை  6 மணிக்கு காப்பி,  மாலை டீயும் வழங்கப்படுகிறது.

Tags : Sambar ,Kamakama Fish Curry ,Chikara , Kerala, fish curry, chicken, ghee, sambar, kuruma, apam
× RELATED சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ்