×

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து இறந்த பார்மசிஸ்ட் நிபுணருக்கு கொரோனா: சளி, ரத்த மாதிரி ஆய்வில் தகவல்

சென்னை : கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சோடியம் நைட்ரேட் மாத்திரையை சாப்பிட்டு இறந்த பார்மசிஸ்ட் நிபுணருக்கும் கொரோனா தொற்று இருந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருங்குடி காலேஜ் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சிவனேசன் (47). பார்மசிஸ்ட் நிபுணரான இவர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் உள்ள சுஜாதா பயோ டெக் என்ற நிறுவனத்தில் புரடெக்‌ஷன் மேலாளராக வேலை செய்து வந்தார். இவர், சளி மற்றும் இருமலுக்கு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

சிவனேசன் மருந்து கண்டுபிடிப்பதில் நிபுணர் என்பதால் கொரோனா நோய் தொற்றுக்கு சில நாட்களாக சென்னை தி.நகரில் உள்ள தனது நண்பர் டாக்டர் ராஜ்குமார் வீட்டில் சோதனை மேற்கொண்டு வந்தார். அப்போது சோடியம் நைட்ரேட்  மூலம்  ரத்த அணுக்களின் உற்பத்தியை பெருக்க பல ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வுகளின் பலனாக ரத்த அணுக்கள் பெருக்கத்தால் கொரோனா நோயை  கட்டுப்படுத்துவதை அவர் கண்டுபிடித்தார். இதனால் சோடியம் நைட்ரேட் மூலம் ரத்த அணுக்கள் பெருக்கும்  மாத்திரையை அவர் உருவாக்கினார். தான் கண்டுபிடித்த மாத்திரையை கடந்த 8ம் தேதி தனக்கு தானே சிவனேசன் பரிசோதனை செய்தார். அப்போது திடீரென மாத்திரையின் வீரியத்தால் பரிசோனை செய்த சிறிது நேரத்தில் சிவனேசன் மயக்க நிலையை அடைந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த பார்மசிஸ்ட் நிபுணர் சிவனேசனின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த பரிசோதனை முடிவு நேற்று வந்தது. அதில் சிவனேசனுக்கு கொரோனா நோய் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : pharmacist ,Corona ,Pharmacologist , Corona, pharmacist, pharmacist, corona, mucus, blood sample
× RELATED கடைகளில் மருந்துகள் விற்பதை தடை செய்ய வேண்டும்