×

மாலத்தீவிலிருந்து 698 இந்தியருடன் கடற்படை கப்பல் இன்று கொச்சி வருகை

திருவனந்தபுரம்: 698 இந்தியர்களுடன் மாலத்தீவில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட கடற்படை கப்பல் இன்று கொச்சியை வந்தடைகிறது. கொரோனா  பீதியால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் பல்வேறு  விமானங்கள்  மற்றும் கப்பல்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். கடந்த இரு   நாட்களாக கொச்சி, கோழிக்கோடு, சென்னை, மும்பை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு,  வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை அழைத்துக்கொண்டு விமானங்கள் வந்தன.
இந்த  நிலையில் மாலத்தீவில் சிக்கியுள்ள இந்தியர்களை  அழைத்து வர கடற்படைக்கு  சொந்தமான ‘ஐஎன்எஸ் ஜலஸ்வா’ கப்பல் புறப்பட்டு  சென்றது. நேற்று முன்தினம் வழக்கமான  பரிசோதனைகள் முடிந்த பின்னர், 19  கர்ப்பிணிகள், 14 குழந்தைகள் உட்பட 698  இந்தியர்கள் அந்த  கப்பலில் ஏறினர். இதையடுத்து அந்த கப்பல்  மாலத்தீவில் இருந்து புறப்பட்டது. இன்று காலை இந்த கப்பல் கொச்சி  துறைமுகம்  வந்தடையும்.

பின்னர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.  இதில் நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைகளுக்கு அனுப்பி  வைக்கப்படுவர். அறிகுறிகள் இல்லாதவர்கள் 14 நாட்கள் வீடுகளில் தனிமையில்  இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்படுவர்.  இன்று முழு ஊரடங்கு: ேகரளாவில்   கொரோனா நோய் பரவல் வெகுவாக  கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 16   பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து    சிவப்பு மண்டலம் தவிர மற்ற பகுதிகளில் பெரும்பாலான கடைகள்    திறக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து தவிர பிற வாகனங்கள் இயங்கி    வருகின்றன. வங்கிகள் உட்பட தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு    வருகின்றன.

இருப்பினும் நோய் மேலும் பரவாமல் இருக்க   ஞாயிற்றுக்கிழமைகளில்  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என   முதல்வர்  பினராய் விஜயன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று கேரளாவில் கடைகள் உட்பட அனைத்து  நிறுவனங்களும்   மூடப்படும். வாகனங்கள் இயங்கக்கூடாது. அதிநவீன கேமரா  திருவனந்தபுரம் எம்பி  சசிதரூர் ஏற்பாட்டில் தெர்மல் பேஸ் டிடக்‌ஷன் கேமரா   வௌிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டது. கடந்த  சில தினங்களுக்கு முன்பு   திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் ெவளிமாநில  தொழிலாளர்களுக்கு இந்த கேமரா   மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தோகாவில்  இருந்து  திருவனந்தபுரத்துக்கு ஒரு விமானம் வருகிறது. அதில்  வருபவர்களை  பரிசோதிக்க  இந்த தெர்மல் பேஸ் டிடக்‌ஷன் கேமரா  பயன்படுத்தப்படுகிறது.

 பொதுவாக  காய்ச்சலுக்கான மருந்து சாப்பிட்டு உடல் வெப்பநிலையை   குறைத்திருந்தால்  தெர்மல் ஸ்கேனரில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இந்த  தெர்மல் பேஸ்  டிடக்‌ஷன்  கேமராவால் காய்ச்சல்  உள்ளதை துல்லியமாக அறிந்து  கொள்ள  முடியும்.

Tags : 698 Indians ,Maldives , Maldives, 698 Indians, Naval Ship, Cochin
× RELATED அமெரிக்காவின் கடற்பாதுகாப்பு கப்பலான...