×

புரோகிதர்கள் சமையலர்களுக்கு நிவாரண நிதி: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திருமணம், திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் வேலைக்கு செல்லும் சமையல்காரர்கள், சமையலுக்கு உதவி செய்பவர்கள், நாதஸ்வரம், தவில் வாசிக்கும் வித்வான்கள், திருமண வரவேற்பினர் போன்றோர் ஊரடங்கினால் வேலையின்றி, வருமானம் இன்றி சிரமப்படுகிறார்கள்.   அதேபோல, வைதீக தொழிலில் ஈடுபட்டுவரும் சாஸ்திரிகள், சிவாச்சாரியார்கள், வட்டாச்சாரியார்கள், கோயிலில் பூஜை செய்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் வருமானம் கிடைக்கவில்லை.

எனவே தமிழக அரசு வேலையின்றி, வருமானம் இன்றி தவிக்கின்ற புரோகிதர்கள், சமையல்காரர்கள், கோயிலில் பூஜை செய்பவர்கள், வைதீக தொழிலில் ஈடுபடுபவர்கள், திருமண வரவேற்பினர் மற்றும் துப்புரவாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் போன்ற நலிந்த பிரிவினருக்கும் நிதியுதவி வழங்கிட வேண்டும்.

Tags : Relief Fund for Providers Chefs: GK Vasan ,Providers Chefs for Relief Fund , Providers cooks, Relief Fund, GK Vasan
× RELATED தேஜஸ்வி யாதவா? தேஜஸ்வி சூர்யாவா?.. பெயர்...