×

பாதிப்பில் தொடர்ந்து 2-வது இடத்தில் குஜராத்: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,000-ஐ நெருங்கியது: 1886 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,000-ஐ நெருங்கியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா  வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால்  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 59,662 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3320 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 95 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.   கொரோனாவால் இதுவரை 1886 பேர் உயிரிழந்த நிலையில், 17,847  பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 19,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 731 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 3470 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 7402 பேருக்கு தொற்று பாதிப்புடன்  குஜராத் மாநிலம் 2ம்  இடத்தில் உள்ளது. அங்கு, 449 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1872 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 4-வது இடத்தில்  உள்ளது. கடந்த வாரம் வரை 6-வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த வாரம்   முதல் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில்  6009 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1605 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 59 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 34 பேர் குணமடைந்தது.
பீகாரில் 571 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 297 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 150 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 59 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 38 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 6318 பேருக்கு பாதிப்பு; 68 பேர் பலி; 2020 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 647 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 279 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 118 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 503 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 484 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 3579 பேருக்கு பாதிப்பு; 101 பேர் பலி; 1916 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 132 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 52 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 42 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 17 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 12 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 271 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 63 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 9 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 6 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1731 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி; 152 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 63 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 46 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 753 பேருக்கு பாதிப்பு; 30 பேர் பலி; 376 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 823 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 364 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1133 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி; 700 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 1678 பேருக்கு பாதிப்பு; 160 பேர் பலி; 364 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 1887 பேருக்கு பாதிப்பு; 41 பேர் பலி; 842 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 3341 பேருக்கு பாதிப்பு; 200 பேர் பலி; 1349 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 3214 பேருக்கு பாதிப்பு; 66 பேர் பலி; 1387 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 50 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 38 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Tags : Coronal ,India ,Gujarat , Gujarat: Coronal casualties in India reach 60,000: 1886 killed
× RELATED இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்...