×

போர் விமானம் விழுந்து விபத்து பாராசூட்டில் தப்பினார் விமானி

புதுடெல்லி: விமானப்படைக்கு சொந்தமான மிக் 29 ரக போர் விமானம் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் அருகே உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில் இருந்து நேற்று மிக் 29 ரக விமானம் வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. முன்னதாக விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை உணர்ந்த விமானி அதில் இருந்த பாராசூட் மூலமாக வெளியேறி உயிர்தப்பினார். போர் விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags : Fighter plane, crash, parachute, escaped pilot
× RELATED தீப்பிடித்து எரிந்த சாலை: ஆந்திராவில் பரபரப்பு