×

கடந்த அக்டோபர் முதல் டிசம்பருக்குள் 200 முறை தன்னைத் தானே மாற்றிக் கொண்ட கொரோனா: லண்டன் விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்

லண்டன் : கடந்த அக்டோபர் முதல் டிசம்பருக்குள் 200 முறை தன்னைத் தானே கொரோனா வைரஸ் மாற்றிக் கொண்டுள்ளதாக லண்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 7,500 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை வைத்து லண்டன் மரபணு ஆய்வு பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் கடந்த ஆண்டு அக்டோபருக்கும் டிசம்பருக்கும் இடையில் சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய உடனேயே மற்ற உலக நாடுகளுக்கும் மிக விரைவாக வைரஸ் பரவியது தெரிய வந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சார்ஸ் சிஓவி 2 (SARS-CoV-2) எனும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதன் தன்மையை 200 முறைக்கு மேல் மாற்றிக் கொண்டுள்ளதன் காரணமாகவே அது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும்போது அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அத்துடன் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 11ஆம் தேதி வரையிலான காலத்தில் பரவ ஆரம்பித்துள்ளது. அப்போதுதான் வேறு உயிரினத்தில் இருந்து மனிதனுக்கும் வைரஸ் பரவியிருக்கலாம் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்த ஆய்வின் முடிவுகள், மரபணு ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

Tags : Corona ,London ,times ,scientists , October, December, 200, Corona, London, Scientists
× RELATED புதிய தடுப்பூசிகள் அதிகம்...