×

குரங்குகளுக்கு மருந்தை செலுத்தி சோதனை: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டோம்.... சீன நிறுவனம் அறிவிப்பு

பீஜிங்: கொரோனா வைரஸ் தொற்றிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 190க்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து எப்போது தீர்வு கிடைக்கும்? எத்தனை நாட்கள் இது நம்முடன் இருக்கும்? உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்? என்பன போன்ற  கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து  கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை எதையும் யாராலும்  உறுதியாக கூற முடியாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவும் சீனாவும் ஆய்வு பணிகளை மிக வேகமாக நடத்தி வருகின்றன. தற்போதைய சூழலில் எந்த   நாடு முதலில் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கிறதோ அந்த நாடு உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் சோதனை வெற்றி  பெற்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேலும், இந்தத் தடுப்பு மருந்துக்கு விரைவில் காப்புரிமை பெறப்படும். அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இரு நிறுவனங்களுடன் இந்த மருந்து உற்பத்தியைத்  தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது. பிகோவாக் எனப்படும் இந்த மருந்தை பீஜிங்கைச் சேர்ந்த சினாவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. குரங்குகளுக்கு  இம்மருந்தை செலுத்தி, 3 வாரங்கள் கழித்து கொரோனா தாக்குதலுக்கு உட்படுத்தினர். அடுத்த ஒரு வாரம் கழித்து சோதனை செய்து பார்த்தபோது, குரங்குகளின் நுரையீரலில் வைரஸ் தொற்று இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. மேலும்,  மருந்து செலுத்தப்படாத கொரோனா தொற்றுக்கு உள்ளான குரங்குகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் பிகோவாக் தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயல்படுவதாக அந்நிறுவனம்  தெரிவித்துள்ளது.



Tags : firm ,Chinese , Anti-coronavirus drug tested in monkeys: Chinese firm announces
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...