×

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தள்ளிவைப்பு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வருகிற ஜூன் 21ந் தேதி நடைபெறும் என்று அதற்கான அட்டவணை கடந்த மாதம் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி எம்.ஜெய்சந்திரனும், தனி அதிகாரி கே.கே.மஞ்சுளாவும் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதாலும், தேர்தலுக்கு கால அவகாசம் கேட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.



Tags : Producers , Producers' Association
× RELATED திருச்சிற்றம்பலம் உழவர்...